Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் (Android Applications)

Written By Unknown on Wednesday, June 17, 2015 | 10:51 PM





ஐபோனுக்கு அடுத்த படியாக சக்கை போடு போடும் ஃபோன்கள் android OS உள்ளவை. இதை பயன்படுத்துவது ஒரு குட்டி கம்ப்யூட்டர் என்ற அளவுக்கு மிக அதிகமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் முழுவதும் நமக்கு Applications என்ற பெயரில் Android Market என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆனால் கிட்டதட்ட 2 லட்சத்துக்கும் மேலான வசதிகளில் நமக்கு தேவையானவற்றை மட்டும் எப்படி தேடி எடுப்பது. எனவே சில எல்லோரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டி வரும். அவை எவை என்று அறிவோமா?

கூகிள் தனது Product களை Default ஆகவே தந்து உள்ளது. gmail, google search, maps, voice search, Android Market,Youtube,Gtalk போன்றவை நீங்கள் எந்த மாடல் ஃபோன் வாங்கினாலும் இருக்கும். 

Android என்றால் என்ன என்று அறிய விரும்புபவர்கள் என்னுடைய முந்தய பதிவை படிக்கவும் .

இங்கே சொல்லி உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் இலவசமானவை. 

1. Barcode Scanner 


பார்கோட் என்பது நாம் கேள்வி பட்டு இருப்போம். iPhone & Android வந்த பிறகு பிரபலம் ஆன ஒன்று QR Code. இதன் பலன்கள் பல உண்டு.இது பற்றி ஒரு பதிவே எழுதலாம். இப்போதைக்கு நான் சொல்லும் பலன், இதை வைத்து இருந்தால் நீங்கள் மற்ற அப்ளிகேஷன்களை Android Market சென்று தேடாமல், இதை பயன்படுத்தி குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றின் QR Code தனை Scan செய்தால் நேரடியாக அப்ளிகேஷன் பக்கத்துக்கு செல்லலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் இரண்டு வகையான கோட்களையும் Scan செய்யலாம். 


ஒரு sample கோட் கீழே உள்ளது. 

இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

2. Android Lost


ஆன்ட்ராய்ட் போன்களின் விலை கிட்டதட்ட 8000(நல்ல மாடல் ) ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்படி பட்ட ஃபோன் தொலைந்து போனால்? அப்படி போனால் எளிதாக கண்டுபிடிக்கவே இந்த அப்ளிகேஷன். இதை இன்ஸ்டால் செய்து விட்டு, அவர்கள் தளத்தில் நமது தகவல்களை ரிஜிஸ்டர் செய்து விட்டால் போதும்.


அந்தத் தளத்தில் கேட்கப்படும் SMS notification number என்ற எண்ணுக்கு உங்கள் என்னை தராமல், மொபைல் தொலைந்து போனால் அதற்கு SMS வரும்படியாக உங்கள் நண்பர், வீட்டில் உள்ளோரின் எண் தரலாம். 


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 







3.APP 2 SD FREE


சில சமயங்களில் ஃபோன் மெமரி குறைவாக உள்ள Android மொபைல் வாங்கும் போது நிறைய அப்ளிகேஷன்களை உங்களால் இயக்க முடியாது. அதை தவிர்க்க, சில அப்ளிகேஷன்களை மெமரி கார்டுக்கு மாற்ற வேண்டும். அதற்கு இது உதவுகிறது.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும். 



4. App Backup & Restore



நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் Android அப்ளிகேஷன்களை Backup எடுத்து வைக்க இது பயன்படுகிறது.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.


5. Android System Cleaner


Android போனும் உங்கள் கணினி போலவே, தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் ரன் ஆகிக் கொண்டு இருந்தாலோ அல்லது, நாம் எதையும் குளோஸ் செய்யா விட்டாலோ மெதுவாக இயங்கும். இதை தவிர்த்து தேவை இல்லாமல் இயங்கும் வசதிகளை நிறுத்த இது பயன்படுகிறது.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.


6. Opera Mini Browser

எத்தனையோ உலவிகள் இருந்தாலும் opera வுக்கு இன்னும் மவுசு போகவில்லை. சிற்சில குறைபாடுகள் இருந்தாலும். Android மூலம் இணையத்தை பயன்படுத்த சிறந்த உலவி இதுதான்.



அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.



7. TeamViewer for Remote Control


அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும். இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம். Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது.


அல்லது இந்த கோடை Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.



மற்றபடி இணையத்தில் தான் நீங்கள் விழிப்பவர் என்றால் உங்களுக்காகவே

1. Facebook

2. Twitter

3. Blogger


போன்றவையும் இலவசமாகவே கிடைக்கிறது.


நன்றி :- கற்போம்
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni