Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

Team Viewer என்றால் என்ன?

Written By Unknown on Monday, June 22, 2015 | 10:07 PM


உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த link-ல் செல்லவும்.
இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் மேலும் ஒரு வசதி உள்ளது. File Transfer என்பது. இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும் உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password-ஐ மாற்ற Teamviewer open செய்து Refresh போன்ற button (Password க்கு அடுத்து) click செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே button-ல் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் open செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer-க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni