Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்

Written By Unknown on Wednesday, June 17, 2015 | 4:30 AM


இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

1. உங்களுடைய  மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால்username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும்.  அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.

5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள். 

எனக்கு தெரிந்தவற்றை மட்டும் தான் இங்கு சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதாவது இதை பற்றி தெரிந்தால் சொல்லலாம்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni