Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

Written By Unknown on Wednesday, June 17, 2015 | 12:31 AM


கடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.


ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி?


ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது  எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில்"thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.

உங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.godaddy.com/என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.

ஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் "tech", "technology", "techno", "web" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலே  சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். "ஆப்பிள்", "கூகிள்", "பேஸ்புக்" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான். 

சரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.

புதிய  ப்ளாக் உருவாக்குவது எப்படி?

1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.


2. உங்களுக்கு ஜிமெயில் அல்லது வேறொரு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

3. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.


Dashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.

4. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.



அதில்,
Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை (தமிழ் ப்ளாக் என்றால் தமிழில்) கொடுங்கள்.

Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.

கவனிக்க: முகவரியில் என்ன கொடுக்கிறீர்களோ? அதனையே ப்ளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறுவேறாக இருந்தால்  அது வாசகர்களை குழப்பும்.

Template என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு  தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்,


பெயர்: தமிழ் தொழில்நுட்பம்

முகவரி: http://tamiltholilnutpam.blogspot.com/

இறைவன் நாடினால் புதிய பதிவு எழுதுவது பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.


Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni