Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...!

Written By Unknown on Saturday, May 16, 2015 | 9:37 AM


ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive--ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள்.
இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்..
நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்..

DVD Drive Tray திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:

வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.
இவ்வாறான தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?....
அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாவீர்கள்... இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள்இருக்கின்றன.
தீர்வு 1: 
உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)
அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 2:
உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.
தீர்வு 3:
இந்த வழிமுறை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டிய ஒன்று. முதலில் உங்கள் கணினியில் மின்சாரம் பாய்வதை தடை செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய கணினியை shutdown செய்துவிடவும். பிறகு சி.டி. டிரைவின் டிரேவிற்கு அடியில் ஒரு பிளாட் ஸ்குரூ டிரைவை எடுத்து இலேசாக அதனடியில் செலுத்தி, DVD/CD Drive -ன் டிரேயை இலேசாக இழுக்கவும் (வேகமாக பலம்கொண்டு இழுக்கக்கூடாது). இப்பொழுது டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 4: 
இம்மூன்று வழிகளையும் பின்பற்றி DVD Drive கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறார் (Computer Doctor)கம்ப்யூட்டர் வைத்தியர் (பழுது பார்ப்பவர்). அவரிடம் சொல்லி அதனைச் சரிசெய்ய வேண்டியதுதான். ஆம் நண்பர்களே... கணினியைப் பொருத்தவரை தெரியாத செயல்களை நாம் செய்யும்பொழுது மிக கவனமுடன் செய்து பரீசித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் அதற்குரியவர்களிடம் காண்பித்து சரிசெய்வதே சிறந்த முறை.
மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி DVD Tray திறக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் நான்காவது வழிமுறையான கணினி பழுது பார்ப்பவரை அழைத்துதான் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Copyright © 2015. TaMiLeN NeWs - All Rights Reserved
Designed by Mohamed hasni